1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆகஸ்ட் 05 பொதுத் தேர்தலில் 'அப்பே ஜன பல கட்சிக்கான தேசிய பட்டியலை வென்ற அதுரலியே ரத்தன தேரர் விரைவில் ஆளும் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன

திட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு முடங்கிப்போயுள்ளது.

குடி போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒரு மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி, பாதையில் சென்று கொண்டிருந்த சிலரையும் விபத்தில் சிக்க வைத்துவிட்டு தப்பிச் சென்ற பிரதமரின் செயலாளரொருவரை பொலிஸார் நேற்று (10) கைது செய்துள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் பொதுமக்கள் மீது வன்முறை மற்றும் சித்திரவதையைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகக் கவலைகள் அதிகரிக்கும் நிலையில் ஸ்காட்லாந்து பொலிசார் இலங்கைப் பொலிசாருக்கு பயிற்சி அளிக்கும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளனர்.லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிசார் பிரிட்டனைச் சேர்ந்த சில தனியார் கூலிப்படைகள் இலங்கையில் செயல்பட்டமைத் தொடர்பில் விசாரித்து வரும் வேளையில், இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் வரும் நேரங்களில் எல்லாம் `ஈழப் பிரச்சனை` பரவலாகப் பேசப்படும். தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று தம்மைக் காட்டிக் கொண்டு அதன் மூலம் வாக்குகளைப் பெறுவதே கட்சிகளின் நோக்கமாக இருந்துள்ளது.இப்போது மீண்டும் மாகாண சபைகளை இல்லாமல் செய்வதற்கு இலங்கையில் மீண்டும் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளும் அவர்களின் கூட்டணியில் இருப்பவர்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பை ஒரே குரலில் வெளிப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

கொரோனா தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவர் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க மகள் தனது தந்தையின் கொலைக்கு ஐ நா அமைப்பிடம் நீதி கோரி கோரியுள்ளார்.`சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி காலை பணிக்குச் செல்லும் போது இராணுவத்துடன் தொடர்புடைய கூலிப் படைகள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல் போனது.இந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 130 பயணிகள் செல்ல முடியும் என்றபோதும் சரியாக எத்தனை பயணிகள் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி