1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொரோனா முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சிலர் நடிகர் விவேக் மரணத்திற்கு பின்னர் இரண்டாவது ஊசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர். இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து சற்றுமுன் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளனர்.

மே தின நிகழ்வுகளை நடத்துவதை இடைநிறுத்தும் அரசாங்கத்தின்  தீர்மானத்தை மீறி நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று மே தின கொண்டாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளது.

சவுதி தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களை மீள அழைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர செயற்பட்ட வைத்திய தொழிற்சங்கம் ஒன்று, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு தொடர்பிலும் ஆராய்வதற்கு ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவியைத் துறப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திறந்து வைக்கப்பட்டது.

வேலையில்லா பட்டதாரிகளின் ஒன்றிணைந்த மத்திய நிலையம் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.

பதினொரு மாணவர்களை கடத்தி படுகொலை செய்து கடலில் போட்டதுடன் , அவன்கார்ட் ஊழளில் ஈடுபட்ட முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் சமகால அரசாங்கத்திற்கு உள்ளதென எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் என்ன வித்தியாசம்? எவ்விதமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது?

ஆளும் அணியிலும், நமது எதிரணியிலும் கூட சில சகோதர இனத்து நண்பர்களுக்கு என்னை பிடிக்காது. இதன் அர்த்தம் அவர்கள் என்னை வெறுகிறார்கள் என்பதல்ல. மனோ கணேசனுக்கு “தமிழ் திமிர்” இருக்கின்றது. இவருக்கு பதில், நல்ல ஒரு “தமிழ் அடிமை” இருந்திருந்தால் நல்லதுதானே என்றுதான் அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் பார்வையில் அவர்கள் நினைப்பதில் தவறில்லை.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுவெடிப்பில் அழிவடைந்த மூன்று தேவாலயங்களில்  இரண்டு தேவாலயங்கள் அரசாங்கத்தால் புணரமைக்கப்பட்டு, நினைவுகூறல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், கிழக்கில் உள்ள மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அழிவடைந்த தேவாலயத்தில் பிரார்த்தனைகளை நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாகக் கொண்டுள்ள இலங்கை அரசு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க முயல்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்ற கூற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குழப்பத்தில் சிக்கியுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசத்தை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி